கனடாவில் ஐந்து மாகாணங்களில் சம்பள அதிகரிப்பு
கனடாவின் ஐந்து மாகாணங்களில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உயர் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க தொழிலாளர்களும் நிறுவனங்களும் உதவுவதற்காக, ஐந்து கனடிய மாகாணங்களில் அக்டோபர் 1 முதல் குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படுகிறது.
இந்த மாற்றம் ஒன்டாரியோ, மானிடோபா, சஸ்காட்செவன், நோவா ஸ்கோஷியா மற்றும் பிரின்ஸ் எட்வர்டு தீவு மாகாணங்களில் அமலுக்கு வருகிறது.
ஒன்டாரியோ மாகாணத்தில் ஒரு மணித்தியாலத்திற்கான சம்பளம் 17.60 டொலராக அதிகரிக்கப்பட உள்ளது.
பிரின்ஸ் எட்வர்டு தீவீல் ஒரு மணித்தியாலத்திற்கான சம்பளம் 16.50டொலராக அதிகரிக்கப்பட உள்ளது.
நோவா ஸ்கோஷியாவில் ஒரு மணித்தியாலத்திற்கான சம்பளம் 16.50 டொலராக அதிகரிக்கப்பட உள்ளது.
மானிடோபாவில் ஒரு மணித்தியாலத்திற்கான சம்பளம் 16 டொலராக அதிகரிக்கப்பட உள்ளது.
சஸ்காட்செவனில் ஒரு மணித்தியாலத்திற்கான சம்பளம் 15.35 டொலராக அதிகரிக்கப்பட உள்ளது.
அல்பெர்ட்டா குறைந்த ஊதியம் வழங்கும் மாகாணமாக மாற்றம் பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.