எகிப்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை
1922ஆம் ஆண்டின் பின்னர் எகிப்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரச கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை எகிப்தின் 18ஆம் அரச வம்சத்தைச் சேர்ந்த அரசர் இரண்டாம் துட்மோஸுக்குச் (King Thutmose II) சொந்தமானது என எகிப்தின் சுற்றுப்பயண, பழம்பொருள் அமைச்சு தெரிவித்தது.
தொல்பொருள் ஆய்வாளர்கள் கல்லறையில் அரசர், அவரது மனைவி ராணி ஹெட்ஷெப்சுட்டின் (Queen Hatshepsut) பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்ததை வைத்து அதனை அடையாளம் கண்டனர்.
அரசரின் கல்லறையில் நீல நிற எழுத்துகள் அடங்கிய களிமண், மஞ்சள் நட்சத்திரங்கள், சமயக் குறிப்புகள் போன்றவையும் காணப்பட்டன.
அரசரின் இறப்பிற்குப் பின் ஏற்பட்ட வெள்ளத்தால் கல்லறை முறையாகப் பராமரிக்கப்படவில்லை என அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் அதில் இருந்த பல பொருள்கள் அகற்றப்பட்டிருப்பதாகவும் அவற்றை மீட்கும் பணி தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.