கனடாவில் வேலை தேடுவோருக்கு அரிய வாய்ப்பு: கவனம் ஈர்க்கும் 15 பணியிடங்கள்
கனடாவில் புதிதாக வேலை தேடுவோர் அல்லது புத்தாண்டில் வேலை மாற்றம் விரும்புவோருக்கு 2023ல் அரிய வாய்ப்புகள் காத்திருப்பதாக கூறுகின்றனர்.
கனடாவில் உள்ள Randstad என்ற நிறுவனமானது கனடாவில் பிரபலமான 15 பணிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும், திறமையானவர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நிரப்புவதற்காக அனைத்து பின்னணியில் இருந்தும் பல்வேறு வேலை வாய்ப்புகளுடன் பல நிறுவனங்கள் இன்னும் பணியமர்த்துகின்றனர்.
Randstad நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில், கனடாவில் அதிக ஊதியம் பெறும் பணிகள் என்பது, developers, HR managers, mechanical engineer மற்றும் construction project managers என தெரியவந்துள்ளது.
ஆனால் ஒவ்வொரு மாகாணத்தை ஒப்பிடுகையில் ஊதியங்களில் மாறுதல் வரலாம் எனவும் கூறுகின்றனர். 1 முதல் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு மேல் அனுபம் கொண்டவர்களுக்கான ஊதியமே தொடர்புடைய பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.