டொரன்டோ பொது வைத்தியசாலையில் பெரும் நெருக்கடி?
டொரன்டோ பொது வைத்தியசாலையில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
டொரன்டோ பொது வைத்தியசாலையில் 3 தீவிர சிகிச்சை பிரிவுகள் நோயாளர் உச்சவரம்பை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் வைத்தியசாலை வெறும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இருதய நோய் பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவுகளில் பாதிப்பு ஏற்படுத்த கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வைத்தியசாலை இன் தீவிர சிகிச்சை பிரிவு நோயாளர் எண்ணிக்கை உச்சவரம்பை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெருந்தொற்று நிலைமை ஆலணி வள பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணிகளினால் இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சை அளிப்பதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் .
கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாகவும் இதனால் வைத்தியசாலை அனுமதிகள் மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டுள்ளதாக அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் ரகு வேணுகோபல் தெரிவித்துள்ளார்.