கனடாவில் வரலாற்று சாதனை படைத்த மாணவர்கள்
கனடாவின் றொரன்டோ மாவட்ட பாடசாலைகளைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
இறுதிப் பரீட்சையில் நூற்றுக்கு நூறுவீத சராசரியை பெற்றுக் கொண்டு இவ்வாறு மாணவர்கள் ஐந்து பேர் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
உயர்நிலைப்பள்ளி இறுதியாண்டு பரீட்சையில் இவ்வாறு நூற்றுக்கு நூறு வீதம் சராசரிப் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
ஹும்பர்சையிட் கொலிகியேட் உயர்நிலையப் பள்ளியின் நினா டு, ஹார்போர்ட் கொலிகியேட் உயர்நிலைப் பள்ளியின் பாஷா ஹோ, விக்டோரியா பார்க் கொலிகியேட் உயர்நிலைப் பள்ளியின் அவினாஷ் குல்கர்னி, இட்டோபிகோக் கலை உயர்நிலைப் பள்ளியின் சியின்னா முல்லர் மற்றும் ரிச்விவ் கொலிகியேட் உயர்நிலைப்பள்ளியின் கயில் சுங் ஆகியோ மாணவ மாணவியர் இவ்வாறு அபார சதனையை நிலைநாட்டியுள்ளனர்
. 2021-2022ம் ஆண்டு தரம் 12க்கான உயர்நிலைப் பள்ளி இறுதிப் பரீட்சையில் இவ்வாறு குறித்த மாணவர்கள் சாதனை நிலைநாட்டியுள்ளனர்.
இந்த மாணவ மாணவியரில் அனேகர் கற்றல் நடவடிக்கைகளுக்கு அப்பால் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கலை, விளையாட்டு, இசை உள்ளிட்ட பல துறைகளில் இந்த மாணவ மாணவியர் ஜொலிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.