கனடாவில் வீடற்றவர்களுக்காக உருவாக்கப்பட்ட மினி வீடு
கனடாவில் வீடற்றவர்களுக்காக மினி வீடொன்றை ஒருவர் உருவாக்கியுள்ளார்.
ரொறன்ரோவைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு புதிய வீடு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
ராயன் டொனெஸ் என்ற நபர் இந்த நடமாடும் மினி வீடொன்றை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குளிர்காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான வீடற்றவர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த வீடு சைக்கிள்களுடன் பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடற்றவர்களுக்கு தற்காலிக அடிப்படையில் இந்த வீடு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மினி வீட்டை நிர்மானிப்பதற்காக சுமார் 10000 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
நன்கொடைகள் மூலம் இவ்வாறு மூன்று வீடுகள் ஏற்கனவே நிர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சகல அடிப்படை வசதிகளைக்கொண்டமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
படுக்கையறை, வெப்பம், மின்சாரம் மற்றும் நீர் வசதி என்பன இந்த வீட்டில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.