பங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களில் மொத்த எண்ணிக்கை!
பங்களாதேசத்தில் ஷேக் ஹசீனா அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியதில் 500 மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பங்களாதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் முன்னெடுத்திருந்த நிலையில் அது அமைதி நிலைமைக்கு திரும்பியது.
பின்னர் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டமும் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசு சொத்துக்கள் சூறையாடப்பட்டதுடன் ஆங்காங்கே தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
ஷேக் ஹசீனா கட்சியான அவாமி லீக் கட்சி தலைவர்களின் சொத்துக்கள் தீ வைத்து நாசமாக்கப்பட்டன. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஹோட்டலுக்கு தீ வைத்ததில் 20-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து, ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தபின், பங்களாதேசத்தில் நேற்று மாலை வரை குறைந்தது 232 பேர் உயிரழந்தனர்.
வங்காளதேசத்தில் நடைபெற்ற போராட்டம் காரணமாக மொத்தமாக 23 நாள் போராட்ட வன்முறையில் 560 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன் ஜூலை 16-ம் திகதியில் இருந்து ஒகஸ்ட் 4-ம் திகதி வரை 328 பேர் உயிரிழந்துள்ளனர்.