ஜனாதிபதி தேர்தலில் அநுர, சஜித், ரணில் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை இதோ!
நடந்து முடிந்த இலங்கையின் 9 அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.
இந்த முடிவுகளுக்கு அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளுடன் 2வது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
4வது இடத்தில் நாமல் ராஜபக்ஷ 342,781 வாக்குகளுடனும் மற்றும் பா.அரிய நேத்திரன் 226,342 வாக்களுடனும் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.
இதற்கமைய, வாக்குகள் அடிப்படையில் வெற்றிப் பெற்ற அநுர குமார திசாநாயக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால் இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.