கனடாவில் மாணவிக்கு சக மாணவரால் நேர்ந்த துயரம்
கனடாவில் பள்ளி மாணவியை சக மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள ஒரு பள்ளியில் Jennifer Winkler என்ற 17 வயது மாணவி படித்து வந்த நிலையில் Jennifer-ஐ அவருடன் படிக்கும் மாணவர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த Jennifer உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் சிகிச்சை பலனின்றி Jennifer பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் Jennifer-ஐ கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மாணவன் பள்ளிக்கு அருகில் இருந்த ஒரு இடத்தில் மறைந்து இருந்த நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
அதோடு சம்பவத்தை அடுத்து அந்த பள்ளி மூடப்பட்டு உள்ளதுடன் கொலை குறித்து மாணவனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிரான்சில் உள்ள ஒரு மாணவியை சக மாணவியும், மாணவனும் சேர்ந்து கொலை செய்து ஆற்றில் வீசிய நிலையில் அதன் பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது அதே போன்று கனடாவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.