ஸ்பெயின் தலைநகரில் இடம்பெற்ற அதிபயங்கர வெடிவிபத்து: மூன்று பேருக்கு நேர்ந்த சோகம்

Tragedy for three Terrible explosion Spanish capital
By Vasanth Jan 22, 2021 11:18 AM GMT
Report

ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மேட்ரிட் நகரில் நடந்த பயங்கர வெடிவிபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட். அங்கு மத்திய பிவேர்டா டி டோலிடோ பகுதியில் கத்தோலிக்க தேவாலயத்துக்கு சொந்தமான பன்னடுக்கு மாடி கட்டிடம் உள்ளது.

இந்த கட்டிடத்தை பாதிரியார்கள் தங்கி பயிற்சி பெறவும், வீடற்றவர்களுக்கு உணவு வழங்கவும் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி 3 மணி அளவில் அங்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.

அந்த சத்தத்தால், அந்தப் பகுதியே குலுங்கியது. அதைத் தொடர்ந்து தீப்பிடித்தது. புகை மண்டலமும் உருவானது. கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து தூள் தூளானது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இது குறித்த தகவல் அறிந்ததும் அவசரகால பணியாளர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

விபத்து நடந்த இடத்திற்கு அருகே பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என போலீஸ் அதிகாரிகள் தடை விதித்தனர்.தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டன. சம்பவ இடத்தை போலீஸ் அதிகாரிகள் சுற்றி வளைத்து, யாரும் அங்கு வருவதற்கு தடை விதித்தனர்.

இந்த வெடிவிபத்தில் 3 பேர் பலியாகி விட்டனர், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், மற்றொருவர் படுகாயங்களுடனும் மீட்கப்பட்டு லாபாஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாகவும், 6 பேர் காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பலியானவர்களில் ஒருவர் 85 வயதான பெண் என்றும், அவர் சம்பவம் நடந்த சாலைவழியே நடந்து சென்றவர் என்றும் தெரிய வந்தது. ஒருவர் காணாமல் போய் விட்டதாகவும் தெரிய வந்துள்ளது. வெடிவிபத்துக்கான காரணம் உறுதியாக தெரிய வரவில்லை.

இருப்பினும், அந்த கட்டிடத்தில் கொதிகலன் பழுதை கியாஸ் தொழிலாளர்கள் சரி செய்து கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட கியாஸ் கசிவால், பலத்த சத்தத்துடன் பயங்கர வெடிவிபத்து நேரிட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. கொதிகலன் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் ஒருவரும் பலியானவர்களில் அடங்குவார் என்று அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

3 பேர் பலியாகி இருப்பதை மேட்ரிட் நகரத்துக்கான அரசு பிரதிநிதி ஜோஸ் மேனுவல் பிராங்கோ உறுதிபடுத்தினார். இந்த சம்பவத்தையொட்டிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அவற்றில் கட்டிடத்தின் 4 தளங்கள் இடிந்து சேதம் அடைந்திருப்பதையும், புகை பரவியதையும் காட்டின. இந்த விபத்தைத் தொடர்ந்து, அந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த பராமரிப்பு இல்லத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

வெடிவிபத்தின்போது அருகில் இருந்த பள்ளிக்கூடத்தினுள் இருந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவம், அந்த நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US