பிரான்ஸ் மருத்துவமனையில் செவிலியர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!
பிரான்ஸ் மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் செவிலியரே கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் திங்கட்கிழமை இரவு Reims பல்கலைக்கழக மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கும் அதே மருத்துவமனையில் பணிபுரியும் மேலாளர் ஒருவருக்கும் இடையே மோதல் இடம்பெற்றது.
அதன்போது செல்வியரை மேலாளர் கத்தி மூலம் தாக்கியுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான செவிலியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.
இந்த தாக்குதல் நடத்திய மேலாளர் முதலில் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியிருந்த நிலையில் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
தாக்குதலுக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.