உலகளவில் பேசுபொருளான துருக்கிய ஜனாதிபதியின் மொழிபெயர்ப்பாளர்; யார் அந்த யுவதி?
உலகளவில் பேசுபொருளான துருக்கிய ஜனாதிபதியின் மொழிபெர்ப்பாளராக சென்ற யுவதியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. துருக்கி ஜனாதிபதி ரஜப் தய்யிப் அர்துகானுக்கும் (Rajab Tayyab Erdogan) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் ( joe biden) இடையிலான சந்திப்பு கடந்த 15 ஆம் திகதி பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இடம்பெற்றது. இச்சந்திப்பு நோட்டோ நாடுகளின் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து நடைபெற்றது.
இந்த சந்திப்பின் துருக்கிய ஜனாதிபதியின் மொழிபெயர்ப்பாளாராக அழைத்து சென்ற யுவதியுடன் புகைப்படம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
யார் அந்த யுவதி
அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது துருக்கிய ஜனாதிபதியின் மொழிபெயர்ப்பாளராக அழைத்து செல்லப்பட்டவர் பாதிமா கோக்ஜி என்பவராவார். தற்போது மலேசியாவுக்கான துருக்கியின் தூதுவர் மர்வா கோக்ஜியின் புதல்வி. சர்வதேச உறவுகளில் உயர்கல்வியை அமெரிக்காவில் தொடர்ந்து வருகிறார்.
மர்வா கோக்ஜி துருக்கியப் பாராளுமன்றத்தின் முதலாவது ஹிஜாப் அணிந்த பெண் பாராளுமன்ற உறுப்பினராவார். இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஹிஜாப் ஆடையை அணிந்ததற்காக கடந்த நூற்றாண்டின் 90 களில் துருக்கியப் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன்பின்னர் ஹிஜாப் அணிந்தமைக்காக அப்போதைய துருக்கி ஜனாதிபதி சுலைமான் டெமிரேல் அவரது துருக்கிய பிரஜா உரிமையை பறித்தார். எனினும் சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் அவரது பாராளுமன்ற உறுப்புரிமையும் துருக்கிய பிரஜா உரிமையும் பறிக்கப்பட்டமை சட்டபூர்வமற்றது என அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கோக்ஜி அமெரிக்க செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்.
அர்துகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி ஆட்சியில் இருக்கும் காலத்தில் அவர் தனது பிரஜா உரிமையை மீளப் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் தற்போது மலேசியாவுக்கான துருக்கியின் தூதுவராக கடமையாற்றுகின்றார்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனான சந்திப்பின் போது துருக்கிய ஜனாதிபதி ரஜப் தய்யிப் அர்துகான் (Rajab Tayyab Erdogan) பாதிமா கோக்ஜியை மொழிபெயர்ப்பாளராக தெரிவுசெய்தமை குறித்து பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
