கனடாவில் முதியவர்கள் மூவருக்கு அடித்த அதிர்ஸ்டம்
கனடாவில் ஓய்வு பெற்ற மூன்று முதியவர்கள் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளனர். ஓய்வுபெற்ற மூன்று நண்பர்கள்—கிளாரன்ஸ் கென்னடி (Angus), கென்னத் மா (Kenneth Maw) மற்றும் கர்ட் லாவ்லர் (Kurt Lawler) (Barrie)—2025 ஜூலை 16ஆம் திகதி நடைபெற்ற லொட்டோ 6/49 சீட்டிலுப்பில் 1 மில்லியன் டாலர் பரிசை வென்றுள்ளனர்.
முன்னாள் சக ஊழியர்களாக இருந்த இந்த மூவரும் நெருக்கத்தைத் தொடரும் வகையில் மாறி மாறி லாட்டரி சீட்டுகளை கொள்வனவு செய்துள்ளனர்.
அந்த நட்பும், ஒன்றாக விளையாடும் உற்சாகமும் அவர்களை தொடர்ந்து இணைத்து வைத்திருந்தது.

அந்த வாரம் சீட்டு வாங்கும் பொறுப்பு கென்னடிக்குதான் வந்திருந்தது. அவர் Barrie நகரின் Bayfield Street-இல் உள்ள CNIB கடையில் சீட்டை வாங்கச் சென்றார்.
அப்போது அவர் வைத்திருந்த மற்றொரு பழைய சீட்டையும் சரிபார்க்கக் கொடுத்தார் — அதுவே அதிர்ஷ்ட சீட்டாக மாறியிருந்தது.
“திரையில் ‘Big Winner’ என்று தோன்றியதும் இது நிஜமா கனவா எனக்கே தெரியவில்லை,” என்று கென்னடி மகிழ்ச்சியுடன் கூறினார்.
நம்ப முடியாத பரபரப்பில், மூவரும் இந்த நல்ல செய்தியை தங்களின் மனைவிகளுடன் பகிர்ந்தனர்.
அவர்களின் எதிர்வினையும் அதே அளவு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் நிறைந்தது லொத்தர் சீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.