கடைசி அமெரிக்கர் வெளியேற்றப்படும் வரை படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறாது!
ஆப்கானில் இருந்து கடைசி அமெரிக்கர் வெளியேற்றப்படும் வரை தனது படைகளை ஆப்கானில் வைத்திருக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்கப் படைகள் வெளியேற்றம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அதிபர் ஜோ பைடன் (Joe Biden) தமது முடிவு சரியானதுதான் என்றார்.
குழப்பம் இல்லாமல் படைகள் திரும்பப் பெறும் சூழல் இல்லை என்றும் அவர் கூறிய அவர், ஆப்கான் அதிபர் விமானத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதால் தான் ஆப்கான் ராணுவத்தினர் யுத்தத்தை கைவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே இந்திய தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற எந்த உத்தரவையும் இடவில்லை என்று தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு ஆபத்து ஏதுமில்லை என்றும் தாலிபன் அறிவித்துள்ளது.