ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கனடிய பிரதமர்
கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுச் சபையின் 79 ஆம் அமர்வுகள் அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த அமர்வுகளில் அமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் செலென்ஸ்கீ, கனடிய பிரதமர் ட்ரூடோவை சந்தித்திருந்தார்.
இருதரப்பு உறவுகள் தொடர்பில் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் அரசாங்கம் ஜனநாயகத்திற்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அவர் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் பாரிய அரசியல் நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சியான கொன்சர்வேட்டி வ் கட்சி, அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவர திட்டமிட்டுள்ளது என்பதுகு குறிப்பிடத்தக்கது.