வானில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்ட காரணத்தை வெளியிட்ட கனேடிய பிரதமர்!
என்ன காரணத்தினால் வானில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனேடிய மக்களின் பாதுகாப்பிற்கு நியாயமான அளவு அச்சுறுத்தலை ஏற்படுத்திய கரணத்தினால் மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.
யுகொன் பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் இந்த மர்ம பொருள் கனேடிய வான் பரப்பில் பறந்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிவில் விமான போக்குவரத்து சேவைகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தல் நிலைமைகளை கருத்திற் கொண்டே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.