கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்கும் விடயம்: ட்ரம்பின் செய்தி
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப் அவ்வப்போது மிரட்டிவருவது அனைவரும் அறிந்ததே.
ஈரான் போரைத் துவக்கியபின் சிறிது காலம் அமைதியாக இருந்த ட்ரம்ப், தற்போது மீண்டும் கனடாவை சீண்டத் துவங்கியுள்ளார்.
அதாவது, கனடா பொருளாதார தொழில்நுட்ப மந்தநிலை என்னும் நிலைக்குள் சென்றுள்ளது.

இந்த ’பொருளாதார தொழில்நுட்ப மந்தநிலை’ என்பது, உண்மையான பாரம்பரிய மந்தநிலை அல்ல.
ஒரு நாடு, தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவை சந்திப்பதே பொருளாதார தொழில்நுட்ப மந்தநிலை என அழைக்கப்படுகிறது.
ஆகவே, கனடா பொருளாதார தொழில்நுட்ப மந்தநிலைக்குள் சென்றுவிட்டதை சுட்டிக்காட்டி, கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைப்பது குறித்து மீண்டும் இடுகை ஒன்றை வெளியிட்டுள்ளார் ட்ரம்ப்.
அவரது இடுகையை, கனடாவுக்கான அமெரிக்கத் தூதரான பீற் (Pete Hoekstra) மறுபகிர்வு செய்துள்ளார்.
இந்த விடயம் குறித்து கனடா பிரதமரான மார்க் கார்னியிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ட்ரம்ப் வழக்கத்தை விட கூடுதலாக சமூக ஊடகத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.

அவர் வெளியிடும் ஒவ்வொரு இடுகைக்கும் ஃபெடரல் அரசு ரியாக்ட் செய்துகொண்டிருக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.