உக்ரைன் அதிபரை சர்வாதிகாரி என கூறிய டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியை சர்வாதிகாரி என வர்ணித்துள்ளார்.
இந்நிலையில், டிரம்பின் இந்த கருத்து அமெரிக்க உக்ரைன் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு அதிகரிப்பதை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுள்ளன.
டிரம்ப் தவறான தகவல் உலகத்தில் வாழ்கின்றார்
புளோரிடாவில் இடம்பெற்ற சவுதிஅரேபியா ஆதரவுடனான வர்த்தக மாநாட்டில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் உக்ரைன் ஜனாதிபதி ஜோபைடனை போல பிடில் வாசிப்பதில் மாத்திரம் திறமை வாய்ந்தவர் என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி தேர்தல்களை நடத்துவதற்கு மறுக்கின்றார்,உக்ரைன் கருத்துக்கணிப்பில் அவருக்கு ஆதரவு குறைவாக காணப்படுகின்றது,ஒவ்வொரு நகரமும் அழிக்கப்படும்போது எப்படி உங்களிற்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
உக்ரைனிடமிருந்து கனியவளங்களை பெற்றுக்கொள்வதற்கான தனது முயற்சி குறித்து குறிப்பிட்டுள்ள டிரம்ப் உக்ரைன் ஜனாதிபதியே உடன்படிக்கையை மீறினார் என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தவறான தகவல் உலகத்தில் வாழ்கின்றார் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.