ஹனுமான் சிலை குறித்து டிரம்ப் கட்சி பிரமுகர் சர்ச்சை கருத்து
டெக்சாஸில் கட்டப்பட்டுள்ள 90 அடி உயரமுள்ள ஹனுமான் சிலை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசு கட்சியின் தலைவர் ஒருவர், எதிர்ப்பு தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் திறக்கப்பட்ட ஹனுமான் சிலை ஒரு பொய்யான இந்து கடவுளின் சிலை. அதை டெக்சாஸில் இருக்க நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்? நாம் ஒரு கிறிஸ்தவ நாடு!” என்று அலெக்சாண்டர் டங்கன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் “என்னைத் தவிர வேறு எந்த கடவுளும் உங்களுக்கு இருக்கக்கூடாது. வானத்திலோ, பூமியிலோ, கடலிலோ எந்தவிதமான சிலையையும் அல்லது உருவத்தையும் உங்களுக்காக உருவாக்கக் கூடாது, என்று குறிப்பிட்டார்.
டங்கனின் கருத்துக்களுக்கு இந்து அமெரிக்க அறக்கட்டளை மற்றும் இந்திய-அமெரிக்கர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்கள் "இந்துக்களுக்கு எதிரானவை மற்றும் தூண்டுதல் நிறைந்தவை" என்று அவர்கள் சாடியுள்ளனர்.