அமெரிக்க தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் பேத்தி!
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் இடம்பெற்றவுள்ள நிலையில் மில்வாக்கி நகரில் நடைபெற்ற குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில், டொனால்ட் டிரம்பின் பேத்தி 17 வயதான காய் மேடிசன் டிரம்ப்பை அவரது தந்தை ஜூனியர் டொனால்டு டிரம்ப் அறிமுகம் செய்துவைத்தார்.
இதைத் தொடர்ந்து மேடையில் காய் மேடிசன் டிரம்ப் பேசியதாவது,
"என்னுடைய தாத்தாவும் சாதாரண தாத்தா போல்தான். எனது பெற்றோருக்கு தெரியாமல் மிட்டாய்களை வாங்கித் தருவார். எனது கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பார்.
அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒரு மனிதரால் மற்றொரு மனிதர் மீது இதுபோன்ற தாக்குதலை நிகழ்த்த முடிகிறது என்பதை நினைக்கும்போது மிகுந்த கவலையளிக்கிறது.
எனது தாத்தாவை பலரும் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். அனைத்தையும் கடந்து அவர் இன்று வரை நின்று கொண்டிருக்கிறார்.
அவர் எனக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பவர். அமெரிக்காவின் மேன்மைக்காக எனது தாத்தா ஒவ்வொரு நாளும் போராடுவார்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.