குடியேற்றவாசிகளை குவாண்டனாமோ சிறைக்கு அனுப்ப டிரம்ப் திட்டம்
அமெரிக்காவிலுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை கியுபாவின் குவாண்டனாமோ இராணுவ சிறைச்சாலையில் அமெரிக்கா தடுத்துவைக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
30,000 குடியேற்றவாசிகளை தடுத்துவைக்க கூடிய பகுதியொன்றை உருவாக்குமாறு உத்தரவிட்டுள்ள டிரம்ப் அமெரிக்க மக்களிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மிகமோசமான குற்றவாளி சட்டவிரோத வெளிநாட்டவர்களை தடுத்துவைப்பதற்கு இந்த பகுதியை பயன்படுத்தவுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
குவாண்டனாமோ சிறை
1903ம் ஆண்டு உடன்படிக்கையின் கீழ் ஹவானாவிலிருந்து குத்தகைக்கு பெறப்பட்ட, தென்கிழக்கு கியுபாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் 2002 ஜனவரி மாதம் குவாண்டனாமோ சிறை திறக்கப்பட்டது.
செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னர் அவ்வேளை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஜோர்ஜ்காலத்தில் டபில்யூபுஷ் எதிரி போராளிகள் என அழைக்கப்பட்ட மற்றும் பல சட்ட உரிமைகள் மறுக்கப்பட்ட அமெரிக்காவின் கைதிகளை கையாள்வதற்கு இந்த சிறைச்சாலை திறக்கப்பட்டது.
ஜனநாயக கட்சியின் ஜனாதிபதிகளான பராக் ஒபாமாவும் ஜோ பைடனும் இந்த சிறைச்சாலையை மூடுவதற்கு முயன்ற போதிலும் அமெரிக்க காங்கிரஸ் இதற்கு அனுமதி வழங்கவில்லை.
இதேவேளை டொனால்ட்டிரம்பின் இந்த திட்டம் மனிதர்களின் நிலை மற்றும் சர்வதேச சட்டங்களை அவமரியாதை செய்வதை காண்பிக்கின்றது என கியுபா தெரிவித்துள்ளது.