சீனாவில் திடீரென டிரெண்டிங் ஆன டிரம்ப்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின், ‘டொனால்ட்-புத்தர்’ சிலைகள் ஒரு சீன மாகாணத்தில் திடீரென பிரபலமடைந்து வருகின்றன. உள்ளூர் தொழில்முனைவோர் விற்பனையாளர் ஒருவர் இந்த புதிய சிலையை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கிய நிலையில், இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தனது பதவிக் காலத்தில் எப்போதும் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டுடனேயே இருந்த டிரம்ப், 2016 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை முக்கியமாக ‘மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்’ என்ற சொற்றொடரில் நடத்தினார். இந்நிலையில் தற்பொழுது புஜிய மாகாணத்தில் ஜியாமென் சார்ந்த சீன தளவாடங்கள் விற்பனையாளர் ஒருவர் புதிதாக செதுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பைப் பயன்படுத்தி புத்தர் தோரணையில் டொனால்ட் அமர்ந்திருப்பதாகத் தயாரித்துள்ளது.
இதன் மூலம் டிரம்பின் “மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்” போல் “மேக் யுவர் கம்பெனி கிரேட் அகெய்ன்” என்று தெரிவிக்க முயற்சிப்பதாக அந்த விற்பனையாளர் கூறியுள்ளார்.
சீன அரசுக்கு சொந்தமான ஊடகமான குளோபல் டைம்ஸுடனான ஒரு உரையாடலில், புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த விற்பனையாளர், “பெரும்பாலான மக்கள் அதை வேடிக்கைக்காக வாங்கினர். மேலும் நாங்கள் 100 சிலைகளை மட்டுமே தயாரித்துள்ளோம். ஏற்கனவே டஜன் கணக்கானவற்றை விற்றுள்ளோம்.” என கூறியுள்ளார்.