மூன்றாவது முறையாக குறி வைக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ; ஆயுதத்துடன் சிக்கிய நபர்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மூன்றாவது முறையாக கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது துப்பாக்கியுடன் சிக்கிய நபர், டொனால்டு ட்ரம்பை கொல்ல வேண்டும் என்ற உறுதியுடன் பரப்புரைக்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
சனிக்கிழமை கலிபோர்னியாவின் Coachella பகுதியில் தேர்தல் பரப்புரையை டொனால்டு ட்ரம்ப் முன்னெடுத்துள்ளார்.
இந்த நிலையிலேயே லாஸ் வேகாஸில் வசிக்கும் 49 வயதுடைய Vem Miller என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை உடனடியாக சம்பவயிடத்தில் இருந்து பொலிசார் அப்புறப்படுத்தியுள்ளனர்.
ஜனாதிபதியை கொல்ல வேண்டும் என அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. சோதனைச்சாவடி ஒன்றில் கருப்பு நிற வாகனத்தில் துப்பாகியுடன் Vem Miller கைது செய்யப்பட்டுள்ளார்.
மில்லர் ஒரு வலதுசாரி அரசாங்க எதிர்ப்பு அமைப்பின் உறுப்பினராக இருக்கலாம் என்றே அதிகாரிகள் தரப்பு நம்புகின்றனர். இந்த நிலையில், Riverside மாவட்ட ஷெரிப் சாட் பியான்கோ தெரிவிக்கையில்,
டொனால்டு ட்ரம்ப் மீதான மூன்றாவது கொலை முயற்சியும் இதனால் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார். மில்லரிடம் இருந்து தோட்டாக்களும் போலியான அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மில்லர் மீது இருவேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதுடன், 5,000 டொலர் பிணைத்தொகையின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இருமுறை கொலை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குண்டு துளைக்காத கண்ணாடி அரணுக்கு பின்னால் நிறு நொடால்டு ட்ரம்ப் பரப்புரை முன்னெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.