டிரம்பின் நீண்ட நாள் விருப்பம் ; இடிக்கப்படுகிறது வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபர் டிரம்பின் நீண்ட நாள் விருப்பமான பால்ரூம் கட்டும் பணிக்காக வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம், உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவி நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தார்.
இந்த நிலையில், அதிபர் டிரம்பின் நீண்ட நாள் விருப்பமான பால்ரூம் கட்டும் பணிக்காக வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்படுகிறது.
சர்வதேச தலைவர்கள் உடனான சந்திப்புகள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக ரூ.2,200 கோடி மதிப்பில் சுமார் 90,000 சதுர அடி பரப்பளவில் பால்ரூம் கட்டப்படுகிறது. இதற்காக வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியை இடிக்கும் பணியானது நேற்று தொடங்கியது