ரொறன்ரோவில் டிக்கட் இன்றி போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கான எச்சரிக்கை
ரொறன்ரோ பொதுப் போக்குவரத்து சேவையில் டிக்கட் இன்றி பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் உடல் கமராக்களுடன் அதிகாரிகள் கடமையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக ரொறன்ரோ பொதுப் போக்குவரத்து சேவைகளில் கடமையில் ஈடுபடுத்தப்படும் விசேட உத்தியோகத்தர்கள் இந்த உடல் கமராக்களை பயன்படுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு பணி
கடந்த ஒன்பது மாதங்களாக பரீட்சார்த்த அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் குறித்த திட்டம் பூரணமாக அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் உடையில் கண்காணிப்பு பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கட் இன்றி பொதுப் போக்குவரத்தில் பயணிப்போரினால் வருடாந்தம் ரீ.ரீ.சீ அல்லது ரொறன்ரோ பொதுப் போக்குவரத்துச் சேவை சுமார் 140 மில்லியன் டொலர்களை இழக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.