கனடா–அமெரிக்கா பேச்சில் திருப்பம் ; முக்கிய பேச்சுவார்த்தை ஆரம்பம்
கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து விவாதிக்க, கனடாவின் வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்ளங்க் (Dominic LeBlanc) மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) ஆகியோர் வொஷிங்டனுக்கு சென்றுள்ளனர்.
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை 50 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் மற்றும் வோல் ஸ்ரீட் ஜேர்னல் ஆகிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நோக்கில், கனடா மீதான புதிய வர்த்தக வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மூன்று நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.
மேலும் அமெரிக்க விவசாயிகளுக்கான வரிகளை சுழியமாகக் கொண்டுவருவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கனடாவின் பல்வேறு மாகாணங்களின் தலைவர்கள் இந்த வர்த்தக ஒப்பந்தம் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து வெவ்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சில தலைவர்கள் இது குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், இறுதி விபரங்கள் வெளிவரும் வரை காத்திருக்கப்போவதாகவும் கூறியுள்ளனர்.