குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட இருவர்

Arbin
Report this article
ரிச்மண்ட் ஹில் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் இரண்டு பேர் இறந்து கிடந்த சம்பவத்தில் கொலை வழக்கு விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 5.45 மணியளவில் பேவியூ பகுதியில் உள்ள இம்மானுவேல் டிரைவில் குடியிருப்பு ஒன்றில் இருந்து பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், குறித்த குடியிருப்பினுள் ஆண் மற்றும் பெண் ஆகியோரின் சடலங்களை மீட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணை முடியாத நிலையில், மரணமடைந்தவர்கள் தொடர்பில் தகவல் வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர்.
இதனிடையே, உடற்கூராய்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எதுவும் நடந்திருக்கவில்லை என்றே பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ கோரிக்கை வைத்துள்ளனர்.