பிரான்ஸில் வளர்ப்பு நாயால் இரு சிறுவர்களுக்கு நேர்ந்த நிலை!
பிரான்ஸில் வளர்ப்பு நாய் ஒன்று எதிர்பாரா விதமாக இரு சிறுவர்களை கடித்துக்குதறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம சனிக்கிழமை இரவு Champ de Mars (Perpignan) நகரில் இடம்பெற்றுள்ளது.
இங்குள்ள வீடொன்றில் வசிக்கும் இரு சிறுவர்கள் வீட்டின் முன்பாக் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அமைதியாக சென்ற நாய் திடீரென இரு சிறுவர்கள் மீது பாய்ந்துள்ளது. மூக்கு, வாய் போன்ற இடங்களில் கடித்துக்குதறியதுடன், கை கால்களிலும் நாய் கடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உடனடியாக உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டனர். இரு சிறுவர்களுடம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களுக்கு பல இடங்களில் தையல் போடப்பட்டதாக அறிய முடிகிறது.
காயமடைந்த இரு சிறுவர்களும் 7 மற்றும் 11 வயதுடையவர்கள் எனவும், சம்பவத்தை அடுத்து நாயின் உரிமையாளர் கைதாகி விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் அறிய முடிகிறது.