ஒன்றாரியோவில் 2 வயோதிபர்களின் சடலங்கள் மீட்பு
ஒன்றாரியோவில் வயோதிபர்கள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் தொடர்பில் சந்தேகத்திற்கிடமானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சயின்டி மேரி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
70 வயதான ஆண் ஒருவரும் 71 வயதான பெண் ஒருவரும் இவ்வாறு சடலங்கலாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவசர சேவை பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற அழைப்பின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இருவரின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குடியிருப்பு தொகுதி ஒன்றில் இந்த இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த இருவருக்கும் இடையிலான உறவு என்ன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சமூகம் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        