தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு ஈராண்டு சிறை!

Crime South Korea
By Sulokshi Jul 13, 2026 12:06 PM GMT
Report

   தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந் நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை (13) தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசியல் தரகர் ஒருவரிடமிருந்து 270 மில்லியன் வோன் (1,79,800 டொலர்) மதிப்புள்ள கருத்துக்கணிப்புச் சேவைகளைச் சட்டவிரோதமாக இலவசமாகப் பெற்ற குற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு ஈராண்டு சிறை! | Two Year Prison Sentence Ex South Korean President

தீர்ப்பின்படி, அரசியல் தரகர் ஒருவரிடமிருந்து 14 முறை இலவசமாக கருத்துக்கணிப்பு சேவைகளைப் பெற்றதன் மூலமும், அவருக்குப் பிரதிபலனாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வேட்பாளர் நியமனத்தில் செல்வாக்கு செலுத்தியதன் மூலமும் யூன் அரசியல் நிதி தொடர்பான சட்டங்களை மீறியுள்ளதாக சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

Politics எனினும், அந்தக் குற்றச்சாட்டுகளை யூன் மறுத்துள்ளதாகவும், இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய முடியும் எனவும் கூறப்படுகின்றது. அதேவேளை 65 வயதான முன்னாள் ஜனாதிபதி யூன் மீது எட்டு சட்டரீதியான வழக்குகள் உள்ளன.

2024-ல் அவர் குறுகிய காலத்திற்கு அமுல்படுத்திய ராணுவச் சட்டத்துடன் தொடர்புடைய கிளர்ச்சிக்குத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பெப்ரவரி மாதம் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து அவர் தற்போது மேல்முறையீடு செய்து வருகிறார்.

முன்னாள் ஜனாதிபதி கைது செய்வதற்கான அதிகாரிகளின் முயற்சியைத் தடுத்ததற்காக அவருக்கு விதிக்கப்பட்ட ஏழு ஆண்டு சிறைத்தண்டனையை உறுதிசெய்து கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US