வெளிநாடொன்றின் பிரிதி அமைச்சர் இராணுவ சிப்பாய் ஒருவரால் சுட்டுக்கொலை!
உகண்டா நாட்டின் பிரதி அமைச்சர் ஒருவர், தனது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பாலின மற்றும் தொழிலாளர்கள் துறை பிரதி அமைச்சர் சார்ள்ஸ் ஒகேலோ என்கோலா (Charles Okello Engola) அவரின் வீட்டில் வைத்து இன்றைய தினம் (02-05-2023) காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவர் ஓய்வு பெற்ற இராணுவ கேணல் ஒருவராவார். பாதுகாப்பு பிரதியமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
பிரதியமைச்சர் என்கோலாவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த உகண்டா தேசிய இராணுவத்தின் சிப்பாய் ஒருவரே அவரை சுட்டுக் கொன்றுள்ளார்.

சிப்பாய்க்கும் பிரதியமைச்சருக்கும் இடையில் ஏதேனும் வாக்குவாதம் இடம்பெற்றதா என்பது இன்னும் தெரியவில்லை.
இந்த சம்பவத்தின் பின்னர் மேற்படி சிப்பாய் தன்னைத் தானே சுட்டுக் தற்கொலை செய்துள்ளார்.