ரஷ்யாவின் 1000 சதுர கிலோமீற்றர் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் உக்ரைன்
ரஸ்யாவின் 1000 சதுரகிலோமீற்றரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இரண்டரை வருடகால யுத்தத்தில் முதல்தடவையாக உக்ரைன் படையினர் ரஸ்யாவிற்குள் ஊருடுவி தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் ரஸ்யாவின் 1000 சதுரகிலோமீற்றரை உக்ரைன் படையினர் தங்கள் கட்டுபாட்டின் கீழ் வைத்துள்ளதாக உக்ரைனின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
கேர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படையினர் தொடர்ந்தும் இராணுவநடவடிக்கையை முன்னெடுக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்யா யுத்தத்தை ஏனையவர்களின் வாசலிற்கு கொண்டு சென்றது தற்போது அது ரஸ்யாவின் வாசலிற்கு சென்றுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வொலிடெமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் தாக்குதலை பாரிய தூண்டும் நடவடிக்கை என வர்ணித்துள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது நாட்டிலிருந்து உக்ரைன் படையினரை உதைத்து வெளியே அனுப்பபோவதாக தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் மேற்கு பிராந்தியத்திலிருந்து பெருமளவு மக்கள் பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். 28 கிராமங்கள் உக்ரைன் படையினரிடம் விழுந்துள்ளன, 12 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்,
இந் நிலைமை மிக மோசமானதாக காணப்படுகின்றது என உள்ளுர்ஆளுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்