ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட பலக்லைக்கழகங்கள்
ஆப்கானில் கடந்த வருடம் தாலிபான்கள் நாட்டை கைப்பற்றியதில் இருந்து பலக்லைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் திறக்கப்படாமல் இருந்து வந்தன.
இதற்கிடையில், காபூலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஷேக் அப்துல் பாக்கி ஹக்கானி, வெப்பமான மாகாணங்களில் பிப்ரவரி 2 முதல் பல்கலைக்கழகங்கள் மற்றும் குளிர் மாகாணங்களில் பிப்ரவரி 26 முதல் திறக்கப்படும் என்றார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள 6 மாகாணங்களில் நேற்று பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டன. சில மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. லாக்மேன், நங்கர்ஹார், காந்தஹார், நிம்ரோஸ், பாரா மற்றும் ஹெல்மண்ட் மாகாணங்களில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டன.
தாலிபான் ஆட்சிக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தனி வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் என தாலிபான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.