மகள் பிறந்தநாளை கொண்டாடிய சில தினங்களில் விபரீத முடிவை எடுத்த பிரபல இராணுவ வீராங்கனை!
உடற்பயிற்சியின் மூலம் பிரபலமடைந்த இராணுவ வீராங்கனை மகள் பிறந்தநாளை கொண்டாடிய சில நாட்களில் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வந்த வீராங்கனை மிச்சேல் யங்க் (வயது 34). இவர், தான் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு பிரபலமடைந்தார்.
இவருக்கு 12 வயதான கிரேசி என்ற மகள் உள்ளார். கிரேசிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தனது மகள் கிரேசி பிறந்தநாள் தொடர்பாக மிச்சேல் யங்க் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், மகள் பிறந்தநாளை கொண்டாடிய சில நாட்களில் மிச்சேல் யங்க் தற்கொலை செய்துகொண்டார்.
இச் சம்பவம் மிச்சேல் குடும்பத்தினரையும், நண்பர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மிச்சேல் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.