ஐரோப்பாவுக்கு பறந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
உக்ரைன் - ரஷியா போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ( Joe Biden )ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு நடைபெறும் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜோபைடன் ( Joe Biden )பங்கேற்கவுள்ளதுடன், ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டிலும் அவர் கலந்து கொள்கிறார்.
இந்த உச்சி மாநாடுகளில் உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இது குறித்து நேட்டோ பொதுச்செயலாளர் ஸ்டோல்டன் பெர்க் (Jens Stoltenberg)கூறும்போது,
“நேட்டோ தலைவர்கள் பங்கேற்கும் அவசர கால உச்சி மாநாட்டில் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகளை குவிக்க ஒப்புதல் அளிக்கப்படலாம். சுலோவாக்கியா, ஹங்கேரி, பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகளுக்கு நான்கு புதிய போர்க்கால குழுக்கள் அனுப்பப்படும்” என்றார்.
அதேவேளை நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் (Volodymyr Zelenskyy) காணொளி வாயிலாக பேச உள்ளமை குறிப்பிடத்தக்கது.