அமெரிக்கா சூடானுக்கான ஆயுத விநியோகத்தை முடக்க வலியுறுத்தல்
சூடானின் துணை இராணுவப் படையான விரைவு ஆதரவுப் படைகளுக்கு ஆயுதங்கள் வழங்குவதைத் தடுக்க சர்வதேச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ அழைப்பு விடுத்துள்ளார்.
கனடாவில் நடந்த G7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் முடிவில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
சூடானின் துணை இராணுவப் படையினர் பொதுமக்களுக்கு எதிராக கொலை, பாலியல் வன்முறை உள்ளிட்ட திட்டமிட்ட குற்றங்களை செய்ததாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

சூடானில் துணை இராணுவ படையினருக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு மோதல் இடம்பெற்று வருகிறது.
துணை இராணுவ படையினருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதங்களை விநியோகிப்பதாக இராணுவம் குற்றம் சாட்டி வருகிறது. இருப்பினும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அந்த கூற்றுக்களை மறுத்து வருகிறது.
சூடானில் மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. இருப்பினும் இந்த முன்மொழிவுகளை துணை இராணுவ படையினர் மீறியுள்ளனர். இந்நிலையிலேயே மார்கோ ரூபியோ இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.