இஸ்ரேலுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை
இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
காசாவின் மனிதாபிமான நிலைமைகளை மேம்படுத்துமாறு வலியுறுத்தி இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் முப்பது நாட்களுக்குள் காசாவின் மனிதாபிமான நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க சட்டங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட தவறினால் அமெரிக்கா ராணுவம் வழங்கி வரும் உதவிகளில் சிக்கல் நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் கூட்டாக இணைந்து இஸ்ரேலிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய விவகார அமைச்சர்களுக்கு இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான வழிவகைகளை இஸ்ரேல் ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காசாவின் நிலைமைகள் குறித்து மிகுந்த கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.