ஒலிம்பிக் நட்சத்திரம் உசைன் போல்ட் வங்கிக்கணக்கில் இருந்து பல மில்லியன் டொலர் மாயம்
ஒலிம்பிக் ஜாம்பவான் உசைன் போல்ட் பயன்படுத்தி வந்த முதலீட்டுக்கான கணக்கில் இருந்து பல மில்லியன் டொலர் தொகை மாயமாகியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் வென்றுள்ள உசைன் போல்டின் மேலாளர் நுஜென்ட் வாக்கர் குறித்த தகவலை உறுதி செய்துள்ளார். மேலும், ஜமைக்காவின் நிதிப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிச் சேவைகள் ஆணையம் இந்த வழக்கை விசாரித்து வருகின்றன என்பதையும் அவர் உறுதி செய்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக உசைன் போல்ட் முதலீடு செய்து வந்துள்ளதாகவும், ஆனால் இதுபோன்ற நிலை முதல் முறை எனவும் நுஜென்ட் வாக்கர் குறிப்பிட்டுள்ளார்.
2017ல் மட்டும் உசைன் போல்ட் சுமார் 25 மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டியுள்ளார் எனவும், 2022ல் அவரது மொத்த சொத்துமதிப்பு 74 மில்லியன் பவுண்டுகள் எனவும் கூறப்படுகிரது.