தடுப்பூசி பற்றாக்குறை: ஸ்காபரோவில் இடைநிறுத்தப்பட்டுள்ள இரு மையங்கள்!

corona vaccine Scarborough vaccine Lack
By Shankar Apr 17, 2021 07:50 PM GMT
Report

தடுப்பூசி மருந்துகள் பற்றாக்குறை காரணமாக ஸ்காபரோ சென்டனரி மருத்துவமனையிலும் சென்டனியல் கல்லூரியிலும் நடத்தப்பட்டு வந்த தடுப்பூசி வழங்கும் சேவை நிறுத்தப்படுவது மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும்.

விளக்கமாகக் கூறின், ஒன்ராறியோ மாநிலம் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு தடுப்பூசி சொட்டு மருந்தும் முன்பதிவு செய்து காத்திருக்கும் ஒன்ராறியோ வாழ் நபருக்காக ஒதுக்கப்பட்டதாகும். ஒன்ராறியோ மாநில முன்பதிவுப் பொறிமுறை மூலம் மட்டுமே சுமார் 2.5 மில்லியன் முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒன்ராறியோ மாநில முன்பதிவுப் பொறிமுறையைப் பயன்படுத்தாது, மருந்தகங்களிலும் மருத்துவமனை சிகிச்சை மையங்களிலும் பொது சுகாதார பிரிவுகள் மூலமும் செய்யப்பட்ட முன்பதிவுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை.

48 மணி நேரத்திற்கு முன்னர் சுமார் 400,000 ஃபைசர் சொட்டு மருந்துகளை பெற்றுள்ளோம் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

நாட்டின் தடுப்பூசி வழங்கல் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு பாடுபட்டு வருவதை நாம் அறிவோம். அதேவேளையில் ஒன்ராறியோவின் தடுப்பூசி வழங்கலில் மிகப் பெரிய சவாலாக உள்ள விடயம் தடுப்பூசிகளின் சீரானதும் நம்பகமானதுமான வழங்கல் ஆகும்.

 எடுத்துக்காட்டாக, ஒன்ராறியோ மார்ச் 22ஆம் திகதியை ஒட்டிய வாரத்தில் மொடேர்னா தடுப்பூசி மருந்துகளைப் பெற்றுக் கொண்டபோது, அது முதலில் எதிர்பார்க்கப்பட்ட தொகையின் வெறும் 30 வீதம் மட்டுமே கிடைக்கப்பெற்றது.

எமக்கான ஒதுக்கீட்டில் மீதமுள்ள 70 வீதம் - அதாவது 225,600 தடுப்பூசி சொட்டு மருந்துகள் - காலதாமதமாக உயிர்த்த ஞாயிறு வாரத்தையொட்டியே ஒன்ராறியோவுக்கு வந்தடைந்தன. 

இதுவரையும், அதாவது புதன்கிழமை அறிக்கையின்படி, ஏப்ரல் 5ஆம் திகதி எமக்குக் கிடைத்திருக்க வேண்டிய 303,000 மொடேர்னா தடுப்பூசி மருந்துகள் இன்னும் எங்களுக்கு வந்துதடையவில்லை. 19ஆம் திகதி எமக்கு வரவிருந்த ஏறத்தாழ 500,000 மொடேர்னா தடுப்பூசி சொட்டு மருந்துகளின் வருகை எதிர்வரும் 29ஆம் திகதிவரை தாமதமாகியுள்ளது.

ஸ்காபரோ வாழ் மக்கள் அனைவரினதும் கவனத்துக்கு: தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு உங்களால் முன்பதிவு செய்யப்பட்ட குறித்த நாள் பிற்போடப்பட்டுள்ளதானது உங்களை வெறுப்படைச் செய்திருக்கும் என்பதை நாம் அறிவோம்.

ஆகவே, மத்திய அரசிடமிருந்து மருந்துகளைப் பெற்றவுடன் கோவிட்-19 தடுப்பூசி வழங்கலை சரியாக நடைமுறைப்படுத்துவதற்கும், தடுப்பூசி போடும் மையங்களை விரிவுபடுத்தவும் நாம் தயாராக உள்ளோம் என்பதை உங்களுக்கு அறியத் தருகிறோம்.

இதேவேளையில், ஸ்காபாரோ வாழ் மக்களை, நகரத்தால் நடத்தப்படும் இரண்டு சிகிச்கை மையங்களுக்கும் ஒன்ராறியோ மாநில முன்பதிவுப் பொறிமுறையூடாக பதிவுகளை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கிறோம். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US