பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் வாகன விபத்து
பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்து ஏற்பட்டுள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகம் 15 பேர் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்ந்த விபத்து
40 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று எரிபொருள் ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றுடன் மோதியதை தொடர்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்திற்கு உள்ளான வாகனங்கள் வெடித்து தீப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் நால்வரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.