பிரபல நாட்டில் முழு கிராமமும் விற்பனைக்கு... விலை என்ன தெரியுமா?
ஸ்பெயின் நாட்டில் 44 குடியிருப்புகள் கொண்ட கிராமம் ஒன்றை விற்பனைக்கு விடப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.
சால்டோ டி காஸ்ட்ரோ என்ற அந்த கிராமத்தில் மொத்தம் 44 வீடுகள், ஒரு விடுதி, ஒரு தேவாலயம், ஒரு பள்ளி, ஒரு நீச்சல் குளம் என உள்ளது. இந்த கிராமமானது சுற்றுலாத்தலமாக மாற்றும் நோக்கில் ஒருவரால் விலை கொடுத்து வாங்கப்பட்டது.
ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாக அவரால் தனது திட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியவில்லை. இதனையடுத்து, தற்போது அந்த கிராமத்தை அவர் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.
முதற்கட்டமாக அந்தக் கிராமத்தின் விலை 6.5 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.54 கோடி) என்று அறிவித்தார். ஆனால், போதிய வசதிகள் ஏதுமற்ற அந்த கிராமத்தை அந்தத் தொகை கொடுத்து வாங்க யாரும் முன்வரவில்லை.
இந்த நிலையில், தற்போது அந்தக் கிராமத்தை வெறும் 260,000 யூரோவுக்கு (இந்திய மதிப்பில் ரூ.2.1 கோடி) விற்பதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், ரஷ்யா என வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 300 பேர் இந்தக் கிராமத்தை வாங்க விரும்பம் தெரிவித்துள்ளனர்.
அதில் ஒருவர் மொத்த தொகையையும் செலுத்தி இந்தக் கிராமத்தை வாங்க முன்பதிவும் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.