போர் முடிவுக்கு வந்தால் இது நடக்கும்; கடும் பயத்தில் அதிபர் விளாடிமிர் புடின் !
உக்ரைனுக்கு எதிரான போரில் குறைந்தபட்ச வெற்றியைக்கூடப் பெறாமல் போரை முடிவுக்குக் கொண்டுவந்தால், ரஷ்யாவின் உள்நாட்டு அதிகார வர்க்கமும் எதிர்ப்பாளர்களும் தன் உயிரைப் பறித்து விடுவார்கள் என்ற கடும் அச்சத்தில் அதிபர் விளாடிமிர் புடின் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“போரில் வெற்றி பெறாமல் திரும்பினால் அவர்கள் என்னைத் தூக்கிலிட்டு விடுவார்கள்” என்று தனது நெருங்கிய வட்டாரங்களிடம் புடின் புலம்பியதாகப் தகவல்கள் கசிந்துள்ளன. பிரிட்டனின் பிரபல The Economist இதழ் வெளியிட்டுள்ள புலனாய்வு அறிக்கையின்படி,

ஐந்து ஆண்டாக நீடிக்கும் போர்
உக்ரைனின் டான்பாஸ் (Donbas) பிராந்தியத்தை முழுமையாகக் கைப்பற்றுவதுதான் ரஷ்யாவின் தற்போதைய குறைந்தபட்ச இலக்காகும்.
ஐந்து ஆண்டுகளை நெருங்கும் இந்தப் போரில் இதுவரை எந்தவொரு தீர்க்கமான முடிவும் எட்டப்படாத நிலையில், உக்ரைனை வெற்றி கொள்ளாமல் பின்வாங்கினால் அது புடினின் அரசியல் வாழ்க்கைக்கு மட்டுமின்றி அவரது உயிருக்கே பேராபத்தாக முடியும் என ரஷ்ய உயரதிகாரிகள் கருதுகின்றனர்.
போரினால் ரஷ்யாவின் பொருளாதாரம், சர்வதேச வர்த்தகம் மற்றும் இராணுவ பலம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் ரஷ்ய உயரடுக்கு (Elite) தலைவர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது.
“மன்னன் ஆடைகளின்றி நிற்கிறான்” என்ற உணர்வு ரஷ்ய அதிகாரிகளிடையே மேலோங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போரை மேலும் தொடர்வது ரஷ்யாவிற்குப் பொருளாதார ரீதியாகப் பின்னடைவு என்ற போதிலும், பலவீனத்தைக் காட்டக் கூடாது என்ற கிரிமினல் மனநிலையிலேயே புடின் இத்தகைய முடிவுகளை எடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
தன்னைத் தூக்கிலிட்டு விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே புடின் உக்ரைன் மீதான தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தவும், கூடுதலாக 4 லட்சம் வீரர்களைப் போர்க்களத்திற்கு அனுப்பவும் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
உக்ரைனின் ஆற்றல் உள்கட்டமைப்புகள் மீது பிரம்மாண்ட வான்வழித் தாக்குதல்களை நடத்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தயாராகி வரும் வேளையில், புடினின் இந்த உயிர் பயம் போரை மேலும் பேரழிவை நோக்கித் தள்ளும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.