முடிவுக்கு வராத போர்; மீண்டும் உக்ரைனுக்குள் ஊடுருவும் ரஷ்யா இராணுவம்!
ரஷ்ய - உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் யுக்ரேனின் கிழக்குப் பகுதியிலும் தெற்கு குர்ஸ்க் பகுதியிலும் 2,350 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை ரஷ்யா மீண்டும் கைப்பற்றியுள்ளது.
தற்போது குளிர்கால பருவநிலை ஆரம்பித்துள்ள போதிலும் ரஷ்ய இராணுவம் யுக்ரேனில் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 பெப்ரவரி மாதம் போர் ஆரம்பமானதிலிருந்து கடந்த நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 45,680 பேர் ரஷ்யாவில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களுக்கு அமைய நாளாந்தம் 1,523 பேர் உயிரிழப்பதுடன் பலர் காயமடைவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை குறிப்பாகக் கடந்த நவம்பர் 28ஆம் திகதியன்று 2,000 பேர் ரஷ்யாவில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.