ஒன்டாரியோவில் பாரியளவு போதைப் பொருள் மீட்பு
ஒன்டாரியோ மாகாண காவல்துறை (Ontario Provincial Police - OPP) மற்றும் வின்சர் காவல்துறை இணைந்து நடத்திய விசாரணையால், OPP வரலாற்றிலேயே மிகப்பெரிய பென்டனில் (Fentanyl) கைப்பற்றல் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
46 கிலோ கிராம் எடையுடைய பென்டனில், சுமார் 6.5 மில்லியன் கனேடிய டாலர் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை வின்சர் நகருக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு பாரிய அளவிலான பென்டனிலை சாலைகளில் இருந்து அகற்றுவதால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன,” என வின்சர் காவல்துறை துணைத் தளபதி ஜேசன் கிரௌலி தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
25 வயதான வின்சர் நகர் நிக்கோலஸ் காங் மீது 27 குற்றச்சாட்டுகளும், வான்கூவர் நகரைச் சேர்ந்த 28 வயது ஜோஷுவா அக்யூரி மீது 29 குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விசாரணை 2024 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் தொடங்கியது.