ஐரோப்பாவிலேயே அதிஷ்டசாலிகளாக வாழ்ந்த பிரான்ஸ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!
ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது பிரான்ஸ் மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருந்து வருகின்றனர்.
எனினும் அந்த நிலைமை இந்த வருடத்துடன் மாற்றமடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை காலமும் பிரான்ஸ் மக்கள் ஏனைய நாடுகளை போன்று தங்கள் கட்டண பட்டியல்களில் உயர்வைக் கண்டதில்லை.
அரசாங்கம் எரிவாயு விலையில் விலை முடக்கத்தையும் மின்சார விலையில் அதிகபட்சமாக நான்கு சதவீத உயர்விற்கு மேல் செல்லாத வகையில் கட்டுப்பாடுகளை விதித்தது, ஆனால் இந்த இரண்டு நடவடிக்கைகளும் இந்த ஆண்டின் இறுதியில் காலாவதியாகின்றன.
அதற்கமைய, ஜனவரி முதல் எரிவாயு கட்டணம் அதிகபட்சமாக 15 சதவீதமும், மின் கட்டணம் பெப்ரவரி மாதத்தில் இருந்து அதிகபட்சமாக 15 சதவீதமும் உயரும். அதற்கமைய, ஜனவரி மாதம் முதல் சராசரி குடும்பம் ஒன்று ஒரு மாதத்திற்கு 20 யூரோவை மேலதிகமாக செலவிட நேரிடும்.
அரசாங்கம் தற்போது வாகன சாரதிகளுக்கு எரிபொருள் தள்ளுபடியைப் பயன்படுத்தி எரிபொருள் விலையில் உதவுகிறது. இதன் மூலம் வாகன ஓட்டுநர்கள் குறைந்த விலையில் தங்கள் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிக் கொள்கின்றார்கள்.
நவம்பர் நடுப்பகுதியில் இது லிட்டருக்கு 35 சதவீதத்தில் இருந்து ஒரு லிட்டருக்கு 10 சதங்களாக தள்ளுப்படி குறைந்து, ஆண்டின் இறுதியில் முற்றிலும் நிறுத்தப்படவுள்ளது. அதற்குப் பதிலாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் வேலைக்காக தங்கள் காரைப் பயன்படுத்தும் நபர்களுக்கு உதவ அராங்கம் திட்டமிட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இது எவ்வாறு செயல்படும் என்பது பற்றிய முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 2020 ஆம் ஆண்டிலிருந்து உணவின் விலை ஏற்கனவே கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆனால் அடுத்த வரும் முதல் உணவு விலையின் சுனாமியை மக்கள் அனுபவிக்க நேரிடும் என சுப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விநியோகஸ்தர்கள் விலையை அதிகரிப்பதே இதற்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் சுமார் 20 சதவிகிதம், விலங்குகளின் பொருட்கள் 15 சதவிகிதம், கோப்பி 10 சதவிகிதம் போன்று பல உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
2023 ஆம் ஆண்டில் ரயில் டிக்கட்டுகளும் உயரும், நிறுவனத்திற்கான அதிகரித்து வரும் பயன்பாட்டுச் செலவுகளை ஈடுகட்ட, போக்குவரத்து அமைச்சர், அரசாங்கத்திற்கு சொந்தமான SNCF ரயில்களின் கட்டணங்கள் உயரும் என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, ஐரோப்பா முழுவதும் ஆடைகளின் விலை ஏற்கனவே உயர்ந்துள்ளதுடன், பிரான்ஸில் 2022 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் மற்றும் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐந்து முதல் 20 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு எண்ணெய் விலை உயர்வுடன் தொடர்புடையதாக கூறப்படுகின்றது. பொலியஸ்டர் போன்ற சில துணிகளைத் தயாரிக்க எண்ணெய் தேவைப்படுகிறது.
அதே நேரத்தில் எரிபொருள் விலை உயர்வை கொண்டுள்ளது.
பிரான்ஸில் விற்பனையாகும் 96 சதவீத ஆடைகள் வெளிநாட்டில் தயாரிக்கப்படுகின்றன.