கனடாவின் புதிய பிரதமர் மார்ச் மாதம் அறிவிப்பு
கனடாவின் ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் யார் என்பது குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்பட உள்ளது.
கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்த கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைமை பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கட்சி இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கட்சியின் தலைவராகவும் கனடாவின் அடுத்த பிரதமராகவும் லிபரல் கட்சியின் புதிய தலைவர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய பேரவையில் கட்சித் தலைவர் யார் என்பது தீர்மானிக்கப்பட உள்ளது.
கட்சித் தலைமை பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் 350000 டாலர்களை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த தடவை கட்சித் தலைவர் தெரிவின் போது இந்த கட்டுப்பணத் தொகை வெறும் 75000 டாலர்களாக காணப்படும் குறிப்பிடத்தக்கது.
எதிர் வரும் 23ஆம் திகதிக்குள் தலைமை பதவிக்கு போட்டியிடுபவர்கள் அது குறித்து அறிவிக்க வேண்டும் எனவும் கட்டுப்பணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
கட்சியில் தலைமைத்துவ பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு யார் வாக்களிக்க முடியும் என்பதையும் கட்சி நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது.
இதன்படி கனடிய பிரஜைகள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமை கொண்ட 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கனடிய பிரஜைகள் அல்லாதவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் 9ம் திகதி கனடிய லிபரல் கட்சியின் தலைவர் யார் என்பது அறிவிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.