விமான பயணிகளுக்கு மாஸ்க் கட்டாயம்: வலியுறுத்தும் WHO
நீண்ட தொலைவு விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பான WHO வலியுறுத்தியுள்ளது.
தொடர்புடைய பயணிகள் மாஸ்க் அணிவதை உரிய நாடுகள் கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் WHO கேட்டுக்கொண்டுள்ளது.
புதிய ஓமிக்ரான் மாறுபாடு ஒன்று அமெரிக்க மாகாணங்களில் வியாபித்துவரும் நிலையிலேயே விமான பயணிகள் தொடர்பில் WHO தொடர்புடைய கோரிக்கையை முன்வைத்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் கொண்ட நாடுகளில் இருந்து பயணம் மேற்கொள்ளும் மக்கள் விமானங்களில் கட்டாயம் மாஸ்க் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளனர்.
ஐரோப்பாவில் XBB.1.5 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்களில் 27% பேர்கலில் XBB.1.5 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய உலகளாவிய கொரோனா பரவலுக்கு XBB.1.5 காரணமா என்பது குறித்து ஆய்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.