பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?
பிரித்தானிய பிரதமராக செயற்பட்ட லிஸ் ட்ரஸ் பதவியை இராஜினாமா செய்வதாக சற்று முன்னர் அறிவித்துள்ள நிலையில் அரசியல் குழப்பநிலை ஒன்று உருவாகியுள்ளது.
இந்த நிலையில் லிஸ் ட்ரஸ் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. புதிய பிரதமரை தெரிவு செய்யும் நடவடிக்கை அடுத்த வாரம் நிறைவடையும் என குறிப்பிடப்படுகின்றது.
அதேவேளை லிஸ் ட்ரஸின் அரசியல் கொள்கைள் காரணமாக பிரித்தானியா கடுமையான நெருக்கடி நிலைக்கு முகம் கொடுத்தது. இந்த நிலையில் நிதியமைச்சர் நீக்கப்பட்டார்.
அதன் பின்னர் புதிய நிதியமைச்சர் நியமிக்கப்பட்ட போதிலும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை. கடும் அழுதங்களுக்கு முகம் கொடுத்த பிரதமர் சற்று முன்னர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்த பிரதமர் யார் என்பதை கண்டறியும் சிக்கல் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் மூன்றாம் சார்லஸ் மன்னரால் புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை தாம் பதவியில் இருப்பேன் என்று ட்ரஸ் கூறியுள்ளார்.