கைவிட்டுபோன ஆட்சி; சிரிய ஜனாதிபதிக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி; விவாகரத்துகேட்டு விண்ணப்பம்!
நாட்டைவிட்டு ஓடிய சிரியா முன்னாள் ஜனாதிபதி ஆசாத்திடம் இருந்து அவரசது மனைவி விவாகரத்து கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சி அமைக்க உள்ள நிலையில் தப்பியோடிய அல் ஆசாத் ரஷ்யாவில் தனது குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ளார்.
முடிவுக்கு வந்த 50 ஆண்டுக் கால குடும்ப ஆட்சி
ஜனாதிபதி ஆசாத்தின் படைகளுக்கு எதிராக கடந்த 13 வருடங்களாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டி கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து 50 ஆண்டுக் கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
அன்றைய தினமே ஜனாதிபதி ஆசாத் நாட்டை விட்டு தப்பி ஓடினார். தனக்கு முற்காலங்களில் உதவி வந்த ரஷியாவில் ஆசாத் குடும்பதோடு தஞ்சம் அடைந்துள்ளார்.
ஆசாத் நாட்டை விட்டுச் சென்ற பிறகு அவரது ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் பெரும்பாலான உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர். கிளர்ச்சிக் குழுவினர் புதிய தலைமையை உருவாக்கி வருகின்றனர்.
ஆட்சி அதிகாரத்தை இழந்து, பிறந்த நாட்டையும் இழந்து நாடு கடத்தப்பட்டு ரஷிய தலைநகர் மாஸ்க்கோவில் ஆசாத் ( 59 வயது) தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவரிடமிருந்து அவரது மனைவி அஸ்மா அல்-அசாத் (49 வயது) விவாகரத்து கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷியாவில் தனது கணவன் ஆசாத் உடன் தொடங்கியுள்ள புதிய வாழ்க்கையில் அஸ்மா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தனது பிறந்த மண்ணான லண்டனுக்கு திரும்ப விருப்புவதாக துருக்கி, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரிய பெற்றோருக்கு 1975 இல் லண்டனில் பிறந்த அஸ்மா அல்-அசாத் பிரிட்டிஷ்-சிரிய இரட்டை குடியுரிமை பெற்றவர் எனபது குறிப்பிடத்தக்கது.