லண்டன் சிறைச்சாலையில் காதலியை மணந்த விக்கிலீக்ஸ் நிறுவனர்
ஜூலியன் அசாஞ்சே தனது நிறுவனமான விக்கிலீக்ஸ் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை லண்டன் சிறையில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார். ஜூலியன் அசாஞ்சே தனது நிறுவனமான விக்கிலீக்ஸ் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
50 வயதான ஜூலியன் அசாஞ்சே, 2019 ஆம் ஆண்டு முதல் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன், அவர் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகள் கழித்தார்.
இவரும் ஸ்டெல்லா மோரிஸும் (வயது 37) 2011ஆம் ஆண்டு லண்டனில் உள்ள தூதரகத்தில் இருந்தபோது சந்தித்தனர். மோரிஸ் கடந்த 10 ஆண்டுகளாக ஜூலியன் அசாஞ்சேயின் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு முதல் காதலித்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
4 விருந்தினர்கள் மற்றும் இரண்டு சாட்சிகள் சிறையில் திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டதாக அசாஞ்சேயின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.